Sydney Andal Group Inc

"Om namO nArAyaNA"   "AndAL thiruvadigaLE sharaNam"   "srimatE rAmAnujAya nama:" 

Not logged in. Guest user

Pasurathoodu Brahmotsavam

பாசுரத்தோடு (அனுபவிக்க) பிரம்மோத்ஸவம்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருகாப்பு

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

P1-1-R

வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு (பெரியாழ்வார் திருமொழி 1-1-1,2)


முதல் திருநாள் - (கருட) த்வஜா ஆரோஹனம் 

ஓடியோடிப் பல் பிறப்பும் பிறந்து * மற்றோர் தெய்வம்
பாடியாடி பணிந்து * பல் படிகால் வழியேறிக் கண்டீர் *
கூடி வானவர் ஏத்த நின்ற * திருக்குருகூர் அதனுள் *

P1-2-RP1-3-R

ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு * அடிமை புகுவதுவே (திருவாய்மொழி 4-10-7)


முதல் திருநாள் - சேஷ வாஹனம்

சென்றால் குடையாம் * இருந்தால் சிங்காசனமாம் *
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் * என்றும்
புணையாம் மணி விளக்காம் * பூம் பட்டாம் புல்கும்

P1-4-R

அணையாம் * திருமாற்கரவு (முதல் திருவந்தாதி 53)


இரண்டாம் திருநாள் - ஹம்ஸ வாஹனம்

அன்பே தகளியா * ஆர்வமே நெய் ஆக *
இன்புருகு சிந்தை இடு திரியா * நன்புருகி

P2-1-R

​ஞானச் சுடர் விளக்கேற்றினேன் * நாரணற்கு *
ஞானத் தமிழ் புரிந்த நான் * (இரண்டாம் திருவந்தாதி - 1)

அன்னமும் மீன் உருவும் அளரியும் குறளும் *
ஆமையும் ஆனவனே ! ஆயர்கள் நாயகனே ! *
என் அவளம் களைவாய் ! ஆடுக செங்கீரை ! *
ஏழ் உலகும் உடையாய் ! ஆடுக ஆடுக என்று *

P2-2-R

அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு *
ஆன புகழ் புதுவை பட்டன் உரைத்த தமிழ் *
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் * உலகில்
எண் திசையும் புகழ் மிக்கின்பம் அதெய்துவரே * (பெரியாழ்வார் திருமொழி 1-6-10)


மூன்றாம் திருநாள் - முத்து பந்தல்

ஆலமா மரத்தின் இலைமேல் * ஒரு பாலகனாய் *
ஞாலம் ஏழும் உண்டான் * அரங்கத்தரவின் அணையான் *

P3-1-R

கோலமா மணியாரமும் * முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் *
நீல மேனி ஐயோ ! * நிறை கொண்டதென் நெஞ்சினையே !

கொண்டால் வண்ணனை * கோவலனாய்

P3-2-R

வெண்ணை உண்ட வாயன் * என் உள்ளம் கவர்ந்தானை *
அண்டர்கோன் * அணி அரங்கன் * என் அமுதினை
கண்ட கண்கள் * மற்றொன்றினை காணாவே (அமலனாதிபிரான் 9,10)


நான்காம் திருநாள் - ஸர்வ பூபாள வாஹனம்

உயர்வற உயர்நலம் * உடையவன் யவன் அவன் *
மயர்வற மதி நலம் * அருளினான் யவன் அவன் *

P4-1-R

அயர்வறும் அமரர்கள் * அதிபதி யவன் அவன் *

P4-2-R

துயரறு சுடரடி * தொழுதெழன் மனனே !​ (திருவாய்மொழி 1-1-1)


 

ஐந்தாம் திருநாள் - கருட வாஹனம், மோகினி திருக்கோலம்

P5-1-R

ஓடும் புள்ளேறி* சூடும் தண்டுழாய்
நீடு நின்றவை* ஆடும் அம்மானே ! (திருவாய்மொழி - 1.8.1)

P5-2-R

​கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே. (திருவாய்மொழி 10-5-1)

அண்ணல் செய்தலை கடல் கடைந்து * அதனுள்
கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே ! *

P5-3-R

விண்ணவர் அமுதுன அமுதில் வரும் *
பெண்ணமுதுண்ட எம் பெருமானே ! *
ஆண்டாய் ! உனைக் காண்பதோர் *
அருள் எனக்கருளுதியேல் *
வேண்டேன் மனை வாழ்கையை *
விண்ணகர் மேயவனே * (பெரிய திருமொழி 6-1-2)


ஆறாம் திருநாள் - அனுமந்த வாஹனம், கஜ வாஹனம்

முன்பொலா இராவணன் தன்* முது மதில் இலங்கை சேவித்து *

P6-1-R

​அன்பினால் அனுமன் வந்து * அடியிணை பணிய நின்றார்க்கு *
என்பெலா முருகி உருகிட்டு * என்னுடை நெஞ்ச மென்னும்*

P6-2-R

அன்பினால் ஞான நீர்கொண்டு * ஆட்டுவன் அடியனேனே (திருக் குருந்தன்டகம் 15)

மாயமான் மாயச் செற்று* மருதிற நடந்து* வையம்
தாயமா பரவை பொங்கத்* தடவரை திரித்து* வானோர்க்கு *
ஈயுமால் எம்பி ரானார்க்கு* என்னுடைச் சொற்க ளென்னும்*

P6-3-R

​தூயமா மாலை கொண்டு * சூட்டுவன் தொண்ட னேனே! (திருக் குருந்தன்டகம் 16)

சூட்டு நல் மாலைகள் * தூயன வேந்தி* விண்ணோர்கள்

P6-4-R

நன்னீர் ஆட்டி* அந்தூபம் தராநிற்கவே அங்கு * ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்*
கோட்டிடையாடினை கூத்து * அடலாயர் தம் கொம்பினுக்கே. (திரு விருத்தம் 21)

வாய்நல்லார் * நல்ல மறையோதி மந்திரத்தால் *
பாசிலை நாணல் படுத்துப் * பரிதி வைத்து

P6-5-R

காய் சின மா களிறு *அன்னான் என் கைப்பற்றி
தீவலம் செய்யக் *கனாக் கண்டேன் தோழீ! நான் (நாச்சியார் திருமொழி 6-7)


ஏழாம் திருநாள் - சூரன உத்சவம், சூர்யப் பிரபை

சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன் மார்கொண் டோட*
ஒருகையால் ஒருவன்தன் தோளை யூன்ற ஆநிரை யினம்மீளக் குறித்த சங்கம்*

P7-1-R

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் *
அருகேநின் றாள்என்பெண் நோக்கிக் கண்டாள் அதுகண்டுஇவ் வூர்ஒன்று புணர்க் கின்றதே. (பெரியாழ்வார் திருமொழி 3.4.3)

P7-2-R

கதிர் ஆயிரம் இரவி * கலந்தெரித் தாலொத்த நீள்முடியன்*
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்*
அதிரும் கழற்பொருதோள் இரணிய னாகம் பிளந்துஅரியாய்*
உதிர மளைந்தகையோ டிருந்தானை உள்ளவா கண்டாருளர். (பெரியாழ்வார் திருமொழி 4.1.1)


எட்டாம் திருநாள் - வெண்ணை தாழி கோலம், அஸ்வ வாஹனம்

P8-1-R

தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய
பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்
ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்
வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா. (பெரியாழ்வார் திருமொழி 1-5-9)

மீனோ டாமை கேழலரி குறளாய் *
முன்னும் இராமனாய்த்தானாய் *
​பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் *

P8-2-R

கற்கியும் ஆனான் தன்னை*
கண்ணபுரத் தடியேன் * கலியனொலி செய்த
தேனாரின் சொல் தமிழ்மாலை *
செப்பப் பாவம் நில்லாவே. (பெரிய திருமொழி 8-8-10)


ஒன்பதாம் திருநாள் ரதோஸ்தவம், சக்ர ஸ்நானம்

P9-1-R

P9-2-R

அமரர்கள் தொழுதெழ *அலைகடல் கடைந்தவன் தன்னை*
அமர்பொழில் வளங்குருகூர்ச்* சடகோபன் குற்றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் *தவற்றினுளிவை பத்தும் வல்லார்*
அமரரோடுயர்வில் சென்று* அறுவர் தம் பிறவியஞ் சிறையே. (திருவாய்மொழி 1-3-11)

[இந்த திவ்யமான காட்சியை கண்டு கீதையில் அவன் சொன்னதுபோலே
அவனுடைய திவ்யமான அவதாரம் (ஜன்ம), சேஷ்திடங்கள் (கர்ம) பற்றின
அவதார ரஹாசியங்களை யார் அறிகிறார்களோ அதற்கு பலமாக அவர்களுக்கு
மறு பிறவி இல்லை என்பது கண்ணன் திருவாக்கு. (ஜன்ம கரம்ச மே திவ்யம் ஏவம்
யோ வேத்தி தத்வத:| த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம ந இதி மாமேதி ஸோஅர்ஜுன ||)
இந்த பாசுரத்தால் சொல்லப்பட்ட பலனும் அதுவே.]

P9-3-R

ஆழியெழத் *சங்கும் வில்லுமெழ,*திசை
வாழியெழத் *தண்டும் வாளு மெழ,* அண்டம்
மோழை யெழ * முடி பாத மெழ *அப்பன்
ஊழி யெழ* வுலகங்கொண்ட வாறே. (திருவாய்மொழி 7-4-1)


பத்தாம் திருநாள் திருக்கல்யாண உத்சவம், புஷ்ப பல்லக்கு & த்வஜா அவரோஹனம்

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்

P10-1-R

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்​
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்

P10-2-R

​கோளரி மாதவன் கோவிந்தனென்பான் ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்,

இந்திர னுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்தென்னைமகட் பேசி மந்திரித்து

P10-3-RP10-4-R

​மந்திரக் கோடியுடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி

P10-5-R

​பூப்புனை கண்ணிப் புனிதனோடென்றன்னை
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

P10-6-R

​கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்

P10-7-RP10-8-R

​மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்
கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்

P10-9-R

​வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து

P10-10-R

காய்சின மாகளிறன்னானென் கைப்பற்றி
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி

P10-11-R

​செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மிமி திக்கக்கனாக்கண்டேன் தோழீநான்

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி
அரிமுகனச்சுதன் கைம்மேலென்கைவைத்து

P10-12-R

​பொரி முகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

குங்குமமப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்

P10-13-R

​அங்கவனோடு முடஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்கனாக் கண்டேன் தோழீநான்.

ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை
வேயர்பு கழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூயத மிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்

P10-14-R

வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே (நாச்சியார் திருமொழி - 6)

P10-15-R

​தொழுது மலர்க்கொண்டு *தூபம் கையேந்தி*
எழுதும் எழுவாழி நெஞ்சே* பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும்* மாலடியே கைதொழுவான்*
அந்தரமொன்றில்லை அடை.(முதல் திருவந்தாதி 58)

மெய்யர்க்கே மெய்யனாகும் * விதியிலா வென்னைப் போல*

P10-16-RP10-17-R

பொய்யர்க்கே பொய்யனாகும் * புட்கொடியுடைய கோமான் *
உய்யப்போம் உணர்வினார்கட்கு * ஒருவனென்றுணர்ந்த பின்னை *
ஐயப்பாடறுத்துத் தோன்றும் * அழகனூர் அரங்கமன்றே. (திருமாலை 15)

P10-18-R

​பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லுவோமவன் நாமங்களே. (இராமானுச நூற்றந்தாதி 01)

பாசுரத்தோடு அனுபவித்த பிரம்மோத்ஸவம் சம்பூர்ணம்.
ஆழ்வார், எம்பெருமானார், தேசிகர், ஜீயர் திருவடிகளே சரணம்


 

குறை இருப்பின் க்ஷமித்து, திருத்தி பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்,

அடியேன் சிறிய ஞானத்தன்
ரமேஷ்

(Ramesh Raghuraman)